KKRvsSRH : ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியாக இன்று கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரரான பிலிப் சால்ட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 54 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அவருடன் களமிறங்கிய எந்த வீரரும் நிதானத்துடன் விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறினார். அதன் பின் 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரஸ்ஸல்லும், ரிங்கு சிங்கும் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ரஸ்ஸல் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இவர் 25 பந்துகளில் 65* ரன்கள் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 208 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து இமாலய இலக்கான 209 எடுக்க ஹைதராபாத் அணி களமிறங்கியது. ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களான மயங்க் அகர்வாலும், அபிஷேக் சர்மாவும் அட்டகாசமான ஆட்டத்தவுடன் இன்னிங்க்ஸை தொடங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர், பவர்ப்பிளேவில் மட்டும் ஐதராபாத் அணி ஐதராபாத் அணி 65-1 ரன்கள் எடுத்து உச்சத்தில் இருந்தது.
ஆனால், பவர்ப்பிளே முடிந்த உடன் கொல்கத்தா அணியின் சுழற் பந்து வீச்சாளர்களின் சூழலில் சிக்கிய ஹைதராபாத் அணி அடுத்தடுத்து 3 பெரிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது இதன் விளைவாக 11.4 ஓவர்களில் 111-4 என இக்கட்டான நிலையில் தத்தளித்தது ஹைதராபாத் அணி.
அதன் பிறகு மொருமையாக விளையாடிய களமிறங்கிய ஷாபாஸ் அகமது மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடி ஆட்டத்தை துவங்கினர். அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசென் இறுதி ஓவர் வரை அணியின் வெற்றியை கையில் வைத்திருந்தார். ஆனால் கடைசி ஓவரில் 2 பந்துக்கு 5 ரன் தேவைப்பட்ட போது ஹென்ரிச் கிளாசென் ஆட்டமிழக்க, ஆட்டம் மேலும் விறுவிறுப்பாக சென்றது.
இதனால், கடைசி 1 பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த பேட் கம்மின்ஸ் அந்த பந்தை அடிக்காமல் நழுவ விட்டார். இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி திரில் வெற்றி பெற்றது. அபாரகமாக விளையாடிய ஹென்ரிச் கிளாசென் 25 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்தார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…