இந்தியா -பாகிஸ்தான் மோதல்….!பாகிஸ்தான் அணிதான் வெற்றி பெரும் ….! வெளியான கணிப்பு …!
இன்று நடைபெறும் இந்தியா -பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணிதான் வெற்றி பெறும் என்று பாகிஸ்தான் யானை ஒன்று கணித்துள்ளது.
2018 ஆசிய கோப்பை போட்டி யுனைடெட் அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் மோதும் முதல் போட்டி இதுவாகும். இதுவரை ஆசிய கோப்பை போட்டியில் இந்த இரு அணிகளும் 12 முறை மோதியுள்ளது. அதில் இந்தியா 6 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் சந்தித்துளளது.
இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி என்றாலே அனைவருக்கும் தனி ஆர்வம் தான். பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நீண்ட நாட்களுக்கு பிறகு காண ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் போட்டி நடைபெறுவதற்கு முன்னரே சமூக வலைதளங்களில் இந்திய – பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே வார்த்தை மோதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணிதான் வெற்றி பெறும் என்று பாகிஸ்தானில் உள்ள யானை ஒன்று கணித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பூங்காவிலுள்ள யானை இந்தியா மற்றும் பாகிஸ்தான் கொடிகள் போர்த்தி வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பாகிஸ்தான் கொடி வைக்கப்பட்டிருந்த பெட்டியைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இது பாகிஸ்தான் ரசிகர்களை வேண்டுமானால் சந்தோஷப்படுத்தி இருக்கலாம்,இந்திய ரசிகர்களை பொறுத்தவரையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.போட்டி முடிந்த பிறகுதான் உறுதியாக தெரியும் எந்த அணி வெற்றி பெரும் என்று …
Safari Park Karachi Elephant Predicted Pakistan victory against India today
#PAKvIND #AsiaCup2018 pic.twitter.com/ODKc06eoDQ
— ٰImran Siddique (@imransiddique89) September 19, 2018