ஒரு வருசத்துல 50 சிக்ஸர் அடித்த வீரர்களில் கிறிஸ் கெய்ல் இரண்டாமிடம்!
நேற்றைய போட்டியில் இலங்கை அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது . இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்ரில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து முடிவு செய்தது.
முதலில் களமிங்கிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 338 ரன்கள் குவித்தது. பின்னர் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 315 ரன்கள் அடித்து 9 விக்கெட்டை இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்தது.
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரராக கிறிஸ் கெய்ல் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடி வந்த கிறிஸ் கெய்ல் 48 பந்தில் 35 ரன்கள் அடித்தார்.அதில் ஒரு பவுண்டரி , இரண்டு சிக்ஸர் விளாசினார்.
கிறிஸ் கெய்ல் இப்போட்டியில் இரண்டு சிக்ஸர் அடித்ததன் மூலம் ஒரு வருடத்தில் 50 சிக்ஸர் அடித்த வீரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் கிறிஸ் கெய்ல் பிடித்தார்.
டிவில்லியர்ஸ் – 58 (2015)
கிறிஸ் கெய்ல் – 50 (2019) *