ஜிம் வேண்டாம் யோகா போதும் கெய்ல்ளின் புது ரூட்
கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்காக 1991 முதல் விளையாடி வருகிறார்.
தற்போது வரை நான்கு உலகக்கோப்பையில் விளையாடி உள்ளார். இம்முறை ஐந்தாவது போட்டியாகும்.இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் உடலைக் கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்மிலே கிடையாக கிடப்பார்கள் ஆனால் கெய்ல் சற்று வித்தியாசமாக யோகாவை தேர்ந்தெடுத்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் போட்டிகளில் கெய்ல் விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் எடுக்க ஓடும் போது வேகமாக ஓட மாட்டார்.மேலும் பில்டிங்கும் அவரால் தொடர்ந்து செய்ய முடியாது.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்து யோகா மற்றும் மசாஜ் ஆகியவற்றை தேர்வு செய்துள்ளார்.இது குறித்து தெரிவிக்கையில் அவர் ஜிம்மை தவிர்ப்பதாளும் மற்றும் போட்டிகளுக்கு இடையே சற்று ஒய்வு எடுப்பதாலும் இவ்வாறு இருப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது என்று தெரிவித்துள்ளார்.