ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. இதனைதொடர்ந்து, 4 ஆம் டெஸ்ட் போட்டி, இன்று முதல் 19 ஆம் தேதி வரை பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்று தொடங்கிய 4-வது டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகமானார். இந்நிலையில், இன்றைய முதல் போட்டியில் 64 ஓவரை வீசிய நடராஜன் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். ஆஸ்திரேலி வீரர் மேத்யூ வேட் 45 ரன் எடுத்து விளையாடியபோது அவரது விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் போட்டியின் தனது விக்கெட் கணக்கை தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து, மீண்டும் 66 ஓவரை வீசிய நடராஜன் சதம் விளாசி அதிரடியாக விளையாடி வந்த லபுசானே விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால், நடராஜன் இதுவரை 14 ஓவர் வீசிய 2 விக்கெட்டை வீழ்த்தி 33 ரன்கள் கொடுத்துள்ளார். வலைப்பயிற்சியில் பந்து வீசி சென்று ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்றுவித கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமாகிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை நடராஜன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…