கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வா? தேர்வுக்குழு தலைவர் விளக்கம்

Published by
Venu

தோனி ஓய்வு குறித்து வெளியாகும் செய்தி மிகவும் தவறானது என்று தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னால் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் மனைவி பெயர் சாக்சி .இவருக்கு சிவா என்ற ஒரு பெண்குழந்தையும் உள்ளது.கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியின் கோப்பையை வென்றது.மேலும் இருபது ஓவர் உலககோப்பை,ஒரு நாள் தொடருக்கான உலககோப்பை மற்றும் மினி உலககோப்பையை  தோனி தலைமையில் இந்திய அணி வென்றுள்ளது.டெஸ்ட் போட்டியில்  இருந்து தோனி ஓய்வு பெற்ற நிலையில் அவர்   ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில்  விளையாடி வருகிறார்.ஆனால் அவர் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அந்த வேளையில் தோனி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறும் 20-ஓவர் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.அந்த அணியில் தோனி பெயர் இடம்பெறவில்லை.இதனால் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியானது.

இன்று  அவரது ஓய்வு குறித்து அறிவிப்பார் என்று செய்திகள் அதிக அளவில் வெளியாகிவந்தது.மேலும் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் புகைப்படத்தை பதிவிட்டது பெரும் விவாதமாகியது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.இந்தவேளையில் தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தோனி ஓய்வு குறித்து வெளியாகும் செய்தி மிகவும் தவறானது. ஓய்வு குறித்து தோனி பிசிசிஐ-யிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

விண்ணில் தொழில்நுட்ப கோளாறு.., இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!

டெல்லி :  விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…

1 hour ago

பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் சர்ச்சை பேச்சு!

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…

2 hours ago

“தண்டனையை நிறுத்தி வைங்க” அமெரிக்க நீதிமன்றங்களில் டிரம்ப் தொடர் கோரிக்கை!

நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…

3 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : 3 பேருக்கு அனுமதியில்லை, டிவி. பேப்பரில் விளம்பரம் செய்ய வேண்டுமாம்..!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…

4 hours ago

சூர்யாவின் “ரெட்ரோ” பட ரிலீஸ் எப்போது? தேதியை குறித்த படக்குழு.!

சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…

4 hours ago

ஆபாச பேச்சு: மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த புகாரில் தொழிலதிபர் கைது!

கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…

4 hours ago