சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

கடந்த 11 ஐபிஎல் போட்டிகளில் 180+ ரன்களை சேஸிங் செய்த சி.எஸ்.கே அணி அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது.

PBKSvCSK

பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4வது தோல்வியை சந்தித்த சென்னை அணி, தொடர் தோல்வியால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகத் திகழ்ந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் 180 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்யும் போது, தொடர்ந்து சறுக்கி வருவது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக 4 தோல்வி அடைய ரசிகர்களும் துவண்டு போய் விட்டனர். 180+ ரன்களை சேஸ் செய்த போது, கடைசி 11 மேட்சுகளில் ஒன்றில் கூட சிஎஸ்கே வெல்லவில்லை என்பது தான், இதில் மிக சோகமான விஷயம். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், சிஎஸ்கே 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ய முயற்சித்த 11 முறைகளிலும் தோல்வியடைந்துள்ளது.

இது ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட தோல்வி சேஸிங் சோதனையாக பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணி தனது ஆரம்ப காலங்களில் சேஸிங்கில் மிகவும் திறமையாக செயல்பட்டது. குறிப்பாக ,தோனியின் தலைமையில், அணி பல உயர் ஸ்கோர் சேஸ்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.

உதாரணமாக, 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக 206 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்து வெற்றி பெற்றது கடைசி 180+ வெற்றிகரமான சேஸாக உள்ளது. ஆனால், அதற்குப் பிறகு, இதுபோன்ற பெரிய இலக்குகளை சேஸ் செய்வதில் அணி தடுமாறி வருகிறது.

2025 சீசனில் நிலைமை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (197 ரன்கள்): 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

ராஜஸ்தான் ராயல்ஸ் (183 ரன்கள்): 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

டெல்லி கேபிடல்ஸ் (184 ரன்கள்): 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

பஞ்சாப் கிங்ஸ் (220 ரன்கள்): 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்