IPL2024: சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சென்னை வெற்றி..!

Published by
murugan

IPL2024: சென்னை அணி 18.2 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்களும்,  துருவ் ஜூரல் 28 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டையும், 2 துஷார் தேஷ்பாண்டே விக்கெட்டையும் பறித்தனர். 142 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர்.

சிறப்பாக விளையாடி வந்த ரச்சின் ரவீந்திரா 27 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் வீசிய பந்தை அவரிடமே கேட்சை கொடுத்து வெளியேறினார். அடுத்து டேரில் மிட்செல் களமிறங்க வந்த வேகத்தில் 4 பவுண்டரி என மொத்தம் 13 பந்தில் 22 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து மொயின் அலி களமிறங்கினார். இதனால் சென்னை அணி 8 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழந்து 67 ரன்கள் எடுத்திருந்தனர்.

களமிறங்கிய மொயின் அலி நிலைத்து நிற்காமல் வெறும் 10 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சிவம் துபே வழக்கம்போல வந்த வேகத்தில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் என மொத்தம் 18 ரன்கள் எடுத்து நடையை காட்டினார்.  இறுதியாக சென்னை அணி 18.2 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசிவரை களத்தில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 42* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் அணியில்  ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டையும்,  நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.

சென்னையில் 13 போட்டிகள் விளையாடி 7 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி 12 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

56 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago