CSKvsMI : மிரட்டிய பத்திரனா… வீணானது ரோஹித் சதம்…சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!

ஐபிஎல் 2024 : மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 186 ரன்கள் எடுத்தனர். இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய ஐபிஎல் 2-வது போட்டியில் சென்னை, மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீச தேர்வு செய்ய முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 69 ரன்களும், சிவம் துபே 66* ரன்களுடனும், தோனி 20* ரன்களுடனும் கடைசிவரை களத்தில் இருந்தனர்.
மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டையும், ஜெரால்டு கோட்ஸி, ஷ்ரேயாஸ் கோபால், தலா 1 விக்கெட்டை பறித்தனர். 207 ரன் இலக்குடன் மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர்.
பவர் பிளே ஓவரில் மும்பை சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். மும்பை அணி தனது முதல் விக்கெட் 70 ரன்கள் எடுத்திருந்தபோது பறிகொடுத்தது. 8-வது ஓவரை பத்திரனா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலே தொடக்க வீரர் இஷான் கிஷன் 23 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த சூர்யா குமார் யாதவ் அடுத்த இரண்டாவது பந்திலே டக் அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர் ரோகித் சர்மா, திலக்வர்மா இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் திலக் வர்மா 31 ரன் எடுத்து இருந்தபோது சிக்ஸர் அடிக்க முயன்றபோது ஷர்துல் தாக்கூரிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் வந்த வேகத்தில் வெறும் 2 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
17 ஓவரில் புதியதாக களமிறங்கிய டிம் டேவிட் தொடர்ந்து 2 சிக்ஸர் விளாச அடுத்த பந்து சிக்ஸர் அடிக்க முயன்றபோது ரச்சின் ரவீந்திரவிடம் கேட்சைக்கொடுத்து நடையை கட்டினார். இருப்பினும் தொடக்க வீரர் ரோஹித் மட்டும் கடைசிவரை களத்தில் விளையாடி சதம் விளாசி 105* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 186 ரன்கள் எடுத்தனர். இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் பத்திரனா 4 விக்கெட்டையும், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.
சென்னை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 4 போட்டியில் வெற்றியும், 2 போட்டியும் தோல்வியும் அடைந்துள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி 6 போட்டியில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வியும், 2 போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025