தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் என்றும் குறையாது என லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

csk ms dhoni

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து சந்தோசமாக போட்டியை கண்டு கழிப்பார்கள். அதிலும் சென்னை அணிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். சென்னை அணி ரசிகர்கள் என்பது தாண்டி தோனி ரசிகர்கள் என்று கூட நாம் சொல்லலாம்.

ஏனென்றால், அந்த அளவுக்கு தோனியின் பேட்டிங் பார்ப்பதற்காக மட்டுமே பல கூட்டங்கள் வரும். அவர் பேட்டிங் செய்ய வந்தாலே ரசிகர்கள் அவர்களுக்கு கொடுக்கும் ஆதரவை பார்த்து எதிரணி வீரர்கள் கூட சற்று ஷாக் ஆவார்கள். அப்படி தான் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், எல்எஸ்ஜி பயிற்சியாளருமான ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது சென்னை அணி ரசிகர்கள் குறித்தும் தோனி குறித்தும் பேசியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் ” தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடிக்கொண்டு இருக்கும் வரை, அனைத்து மைதானங்களிலும் மஞ்சள் நிறம் ஆதிக்கம் தான் இருக்கும். அவர் விளையாடும் போட்டிகள் மற்ற இடங்களில் நடைபெற்றால் கூட அங்கு மஞ்சள் நிற ஆதிக்கம் தான் இருக்கும் என்பதை நான் உறுதியாக சொல்வேன்.  நான் இதனை சொல்லவில்லை என்றாலும் கூட ரசிகர்களே அதை தான் விரும்புவார்கள்.

அந்த அளவுக்கு தோனியை மக்களுக்கு பிடித்திருக்கிறது. எனவே, அவர் விளையாடும் வரை நிச்சயமாக அந்த மாஸான ரசிகர்கள் கூட்டம் எப்போதும் அவருக்காக இருக்கும்” எனவும் ஜாகிர் கான் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் ” எங்களுடைய (லக்னோ) அணி சிறப்பாக பயிற்சி எடுத்துவருகிறது. அப்படி விளையாடுவோம் இப்படி விளையாடுவோம் என நான் பேச விரும்பவில்லை. ஏனென்றால், கிரிக்கெட்டில் எப்படியான சூழ்நிலைகள் கூட ஏற்படலாம்.

எனவே, எந்த மாதிரி சூழ்நிலைகள் வந்தால் எப்படி எப்படி விளையாடலாம் என்பது பற்றி நாங்கள் திட்டமிட்டு வைத்திருக்கிறோம். போட்டிகளில் எப்படி விளையாடி எப்படி வெற்றிபெறமுடியும் என்பது பற்றியும் திட்டமிட்டு இருக்கிறோம்” எனவும் ஜாகீர் கான்  பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
nitish kumar national anthem
Encounter - TnPolice
csk ms dhoni
ADMK