இந்த சண்டே செம ட்ரீட் தான்! சென்னை – மும்பை பலப்பரீட்சை… இவர்கள் தான் X Factors…
ஐபிஎல்2024: நாளை சென்னை – மும்பை அணி போதும் போட்டியில் இவர்களால் இரண்டு அணிக்கும் தலைவலி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கிய 17வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை லீக் சுற்றில் அனைத்து அணிகளும் 5 போட்டிகளை கடந்து விளையாடியுள்ளது. அதில், ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. இருப்பினும் வரும் போட்டிகளை பொறுத்து புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்படலாம்.
இதில் குறிப்பாக அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் El Clasico என்று அழைக்கப்படும் சென்னை – மும்பை அணிகள் இந்த சீசனில் முதல் முறையாக நாளை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் என்றாலே சென்னை – மும்பை அணிகளின் ஆட்டம் தான் பெரிதும் எதிர்பார்க்கப்படும்.
அந்தளவுக்கு அந்த இரண்டு அணிகளும் சக்ஸஸ்புல் அணியாக இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் இருந்துள்ளனர். இந்த இரண்டு அணிகளும் இதுவரை தலா 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளனர். பலமுறை இரண்டாவது இடமும் பிடித்துள்ளனர். இதனாலே சென்னை – மும்பை அணிகள் மோதும் போட்டி ஒரு இந்தியா – பாகிஸ்தான் மற்றும் கால்பந்தில் பிரபல அணிகள் மோதும் போட்டி போன்று இருக்கும்.
அதுமட்டுமில்லாமல், இந்த இரண்டு அணிகளுக்குமான ரசிகர் கூட்டமும் மற்ற அணிகளை விட அதிகம் தான். இந்த சூழலில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் El Clasico போட்டியான சென்னை – மும்பை போட்டி நாளை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளது.
இந்த சீசன் தொடக்கத்தில் மும்பை அணி 3 தோல்விகளை தழுவினாலும் அடுத்த ஹாம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் எதிரணியை தொம்சம் செய்து மீண்டு ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ளது. அதுவும் மும்பை பேட்டர்கள் அதிரடியான ஆட்டம் மற்ற அணிகளை மிரட்டும் வகையில் உள்ளது. அதேபோல், சென்னை ஆணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
இதில் தோல்வியுற்ற இரண்டு போட்டிகளும் ஹாம் ஸ்டேடியம் அல்ல என்பது குறிப்பிடப்படுகிறது. இருந்தாலும் வெற்றியுடன் தான் மும்பை அணியை எதிர்கொள்கிறது சென்னை. மும்பை வான்கடே ஸ்டேடியம் பேட்டிங் பிட்ச் என்பதால் இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டி ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக இருக்கும்.
எனவே, மும்பை – சென்னை போதும் போட்டியில் யார் மிக முக்கியமான X Factor ஆக இருப்பார்கள் என்பது குறித்து பார்க்கலாம். காயத்தில் இருந்து மீண்டு வந்த மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் கடந்த பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடியதால், அவர் X Factor ஆக இருப்பார் என கூறப்படுகிறது.
இது சென்னை அணிக்கு ஒரு சவாலாக இருக்கும். இருப்பினும், ஜடேஜாவிடம் மூன்று முறை விக்கெட்டை விட்டுள்ளார் சூர்யகுமார் யாதவ். அதேபோல், கடந்த போட்டியின் மூலம் மீண்டும் ஃபார்முக்கு வந்த சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் X Factor ஆக இருப்பார் என்றும் இவரது பேட்டிங் திறன் மும்பை அணிக்கு சவாலாக இருக்கும்.
அவர் மட்டுமின்றி ரஹானே, சிவம் தூபே, ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் மும்பையில் பல முறை விளையாடிய அனுபவம் உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இதில் சுவாரஸ்சயம் என்னவென்றால், எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கேப்டனாக இல்லாமல் களமிறங்குகிறார்கள் என்பது தான்.