சென்னை டெஸ்ட் : சுப்மன் கில் தொடர்ந்து விராட்கோலியும் டக் அவுட்..!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். இதில் சுப்மன் கில், ஒல்லி ஸ்டோன் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர், இறங்கிய புஜாரா நிதானமாக விளையாடி வந்த நிலையில் 28 ரன்னில் பென் ஸ்டோக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய இந்திய அணி கேப்டன் கோலி ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். சுப்மன் கில் டக் அவுட் ஆன நிலையில் விராட்கோலியும் டக் அவுட் ஆனார்.
இந்தியா இப்போது 3 விக்கெட்டை இழந்து 110 ரன்களுடன் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 82 ரன்களுடனும் ரஹானே 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.