சென்னை டெஸ்ட்…இந்திய அணிக்கு 420 ரன்கள் இலக்கு..!

Published by
murugan

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இங்கிலாந்து அணி 420 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இங்கிலாந்து , இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 578 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 218, சிபிலி 87, பென் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடங்க வீரர்களாக இறங்கிய சுப்மான் கில் 29, ரோகித் 6 ரன்களுடன் வெளியேறினார். பின்னர், இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற சரிவில் இருந்த இந்திய அணியை புஜாரா மற்றும் பண்ட் இருவரின் அதிரடி ஆட்டத்தால் மீட்டு வந்தனர். பிறகு மத்தியில் இறங்கிய  தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் விளாசி 85* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.

இறுதியாக இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்தது. இதனால், இங்கிலாந்து அணி 266 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சஸை இன்று தொடங்கியது. ஆட்டம் தொடக்கத்திலே இருந்து தடுமாறி விளையாடி வந்த இங்கிலாந்து அணி 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 178 ரன்கள் எடுத்தனர்.

இந்நிலையில், இந்திய அணிக்கு 420 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் அஸ்வின் 6, ஷாபாஸ் நதீம் 2, பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

Published by
murugan
Tags: #INDvENG

Recent Posts

70’s-ஐ நினைவுபடுத்தும் ராயல் என்ஃபீல்டு புதிய மாடல்.! அட்டகாசமான புது அப்டேட்.!

70’s-ஐ நினைவுபடுத்தும் ராயல் என்ஃபீல்டு புதிய மாடல்.! அட்டகாசமான புது அப்டேட்.!

சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…

5 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- தற்கொலை முயற்சியில் சத்யா..பதட்டத்தில் குடும்பம் .!

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார்  முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…

22 mins ago

“இந்த வெற்றி முன்பே தெரியும்”…அதிபர் டொனால்ட் டிரம்ப் நெகிழ்ச்சி பேச்சு!

அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…

57 mins ago

கோவைக்கு முதலமைச்சரின் சிறப்பு அறிவிப்புகள்., ஐடி பார்க் முதல், கிரிக்கெட் மைதானம் வரை.,

கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…

1 hour ago

47-வது அமெரிக்க அதிபரானார் ‘டொனால்ட் டிரம்ப்’! ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…

1 hour ago

“என்னுடைய வெற்றி மிகப்பெரிய வித்தியாசத்தில் அமையும்”…டொனால்ட் டிரம்பு உறுதி!

அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…

2 hours ago