சென்னை டெஸ்ட் : 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 39/1..!
இந்திய அணி 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 39 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து , இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 578 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து, இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்தது. இதனால், இங்கிலாந்து அணி 266 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சஸை இன்று தொடங்கியது. ஆட்டம் தொடக்கத்திலே இருந்து தடுமாறி விளையாடி வந்த இங்கிலாந்து அணி 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 178 ரன்கள் எடுத்தனர்.
இந்நிலையில், இந்திய அணிக்கு 420 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியில் அஸ்வின் 6, ஷாபாஸ் நதீம் 2, பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் , சுப்மான் கில் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் ரோஹித் 1 பவுண்டரி, சிக்ஸர் விளாசி 12 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதைத்தொடர்ந்து, புஜாரா களமிறங்கினார். 4-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 13 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 39 ரன்கள் எடுத்தனர். களத்தில் சுப்மான் கில் 15, புஜாரா 12 ரன்களுடன் உள்ளனர்.