ஐபிஎல் 2024 : பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி ..! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா சிஎஸ்கே ?
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது.
நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியாக ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பந்து வீச முடிவு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்க சென்னை அணி தயாராக உள்ளது.
கடந்த குஜராத் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்து வரும் ஹைதரபாத் அணியும், டெல்லி அணியிடம் தோல்வியடைந்து வரும் சென்னை அணியும் இந்த போட்டியில் எதிர்த்து மோதவுள்ளது. இந்த போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் 6 புள்ளிகளுடன் முன்னிலையில் செல்வார்கள். அதே போல இரண்டாவது வெற்றியை பெற வேண்டும் என்று முனைப்பில் ஹைதரபாத் அணியும் ககளமிறங்குகிறது.
ஹைதராபாத் அணி வீரர்கள்
அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜெய்தேவ் உனட்கட், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்
சென்னை அணி வீரர்கள்
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா