சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்கு..!
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி மழையால் தாமதமானதால் 15 ஓவர்கள் மட்டுமே விளையாட உள்ளது.
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய சென்னை அணி 3 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க மழை பெய்து ஆட்டம் தாமதமானது. அதன்பிறகு, தற்பொழுது ஆட்டம் 12.10 தொடங்கும் என்றும் 15 ஓவர்களில் 171 ரன்கள் என்ற இலக்கை சென்னை அணி அடைய வேண்டும் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Good news from Ahmedabad folks! ????️
Play to start at 12:10 AM IST
Revised target for Chennai Super Kings ????
1️⃣7️⃣1️⃣ in 15 overs.
Follow the match ▶️ https://t.co/WsYLvLrRhp#TATAIPL | #Final | #CSKvGT
— IndianPremierLeague (@IPL) May 29, 2023