இன்று நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ரன் எடுக்காமல் பேர்ஸ்டோவ் விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடி 29 ரன்னில் வெளியேறினார்.
இதையடுத்து, மத்தியில் இறங்கிய பிரியாம் கார்க் , அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடிய பிரியாம் கார்க் அரைசதம் விளாசி கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர்.
165 ரன்கள் இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டு பிளெசிஸ், ஷேன் வாட்சன் இருவரும் களமிறங்கினர். வாட்சன் 1 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழக்க நிதானமாக விளையாடிய டு பிளெசிஸ் 22 விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால், சென்னை அணி மோசமான நிலையில் இருந்தது. இதையடுத்து, மத்தியில் இறங்கிய ரவீந்திர ஜடேஜா அரைசதம் விளாசினார். பின்னர், டோனி 47* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்து சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…