Chennai team broke the record of Bengaluru team![Image Source : Twitter/@ChennaiIPL]
ஐபிஎல் தொடரில் முதல் பேட்டிங்கின் அதிக ரன்களில் பெங்களூரு அணியின் சாதனையை முறியடித்த சென்னை அணி.
ஐபிஎல் தொடரின் இன்றைய 67வது லீக் போட்டியில் டெல்லியின் அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை செய்ய முடிவு செய்து, அதன்படி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்களை குவித்தது.
இதில், சென்னை அணியில் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் 79, கான்வே 87 ரன்கள் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது. மே 2-ஆம் தேதி ஹைதராபாத்-க்கு எதிராக ராஜஸ்தான் அணி 220 ரன்களை எடுத்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் முதல் பேட்டிங்கின் போது அதிகமுறை 200 ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்தது சென்னை அணி. இதற்கு முன் பெங்களூரு சாதனை படைத்திருந்த நிலையில், அதனை முறியடித்தது சென்னை அணி. அதன்படி, சென்னை அணி 22, பெங்களூரு அணி 21 என ஐபிஎல் தொடரில் முதல் பேட்டிங்கின் அதிகபட்ச ரன்களை பதிவு செய்துள்ளனர்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…