மும்பையை பறக்க விட்டது போல் சென்னையை பறக்க விடுமா ஹைதராபாத்?

Published by
பால முருகன்

ஐபிஎல் 2024 : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகிறது.

ஐபிஎல் சீசன் தொடங்கி விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணிகளும் புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தை பிடித்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு விளையாடி வருகிறது. இதுவரை 17 போட்டிகள் இந்த சீசனில் நடந்து முடிந்த நிலையில், இன்று 18-வது போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

CSKvsSRH : இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் 3 போட்டிகள் விளையாடி 2 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. அதைப்போல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மற்றும் வெற்றிபெற்று 6-வது இடத்தில் உள்ளது.  எனவே, இன்று நடைபெறவுள்ள இந்த போட்டியில் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் முன்னுக்கு செல்லவேண்டும் என்ற முனைப்போடு இரண்டு அணியும் களம் காண்கிறது.

இதுவரை நேருக்கு நேர் (Head to Head)

இதுவரை சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் 19 முறை நேருக்கு நேராக மோதியுள்ளது. இதில் 14 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வெற்றிபெற்றுள்ளது. ஹைதராபாத் அணி 5 போட்டிகள் மட்டும் தான் வெற்றிபெற்று இருக்கிறது. இந்த விவரத்தை வைத்து பார்க்கையில் சென்னை அணியின் வெற்றி ஹைதராபாத் அணியை விட அதிகமாக இருக்கிறது. எனவே, ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை நல்ல சாதனை வைத்து இருப்பதால் இன்றயை போட்டி சற்று சுவாரசியமாக இருக்கும்.

ஹைதராபாத் அணியின் மிரட்டல் பார்ம்

இந்த சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே ஹைதராபாத் வெற்றிபெற்றாலும் மும்பை அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு அதிரடியாக விளையாடி 277 ரன்கள் அடித்து ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அதிகபட்சமாக எடுத்த ரன்கள் என்ற சாதனையை படைத்தது இருந்தது. எனவே, இன்று நடைபெறும் போட்டியிலும் அதே போலவே ஹைதராபாத் அணி விளையாட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

சென்னை 

ருதுராஜ் கெய்க்வாட் (c), ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே, டேரில் மிட்செல், எம்எஸ் தோனி (wk), சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, துஷார் தேஷ்பாண்டே, மதிஷா பத்திரனா.

ஹைதராபாத்

டிராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (wk), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (c), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்

Recent Posts

2030-ல் உலக கோப்பை… 30 லட்சம் நாய்களை கொல்ல மொராக்கோ அரசு ‘பகீர்’ திட்டம்!

ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…

2 hours ago

மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் திடீர் தீ விபத்து!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…

2 hours ago

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்!

காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…

3 hours ago

தொடரும் வடகிழக்கு பருவமழை… தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…

4 hours ago

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

6 hours ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

7 hours ago