சென்னை அணி 15.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச தேர்வு செய்தது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 106 ரன்கள் எடுத்திருந்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக தமிழக வீரர் ஷாருக்கான் 47 ரன்கள் எடுத்தார்.
பின்னர் இறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் ருதுராஜ் 5 ரன்னில் வெளியேறினார். பின்னர், இறங்கிய மொயீன் அலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களம் கண்ட சுரேஷ் ரெய்னா 8, அம்பதி ராயுடு ரன் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இறுதியாக சென்னை அணி 15.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் சாம்கரண் 5*, டு பிளெசிஸ் 36* ரன்களுடன் நின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…