மும்பையை மிஞ்சிய சென்னை! சோஷியல் மீடியாவில் யார் கெத்து? மொத்த லிஸ்ட் இதோ!

சமூக வலைத்தளங்களில் மொத்தமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 42 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

CSK MI

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை ரசித்து வருவார்கள். ஒரு சிலர் இந்த அணிக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் அந்த அணிக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் எனவும் பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், மொத்தமாக சமூக வலைத்தளங்களில் எந்த அணிக்கு அதிகமாக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரியுமா? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் அதிகம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள்.

இரண்டாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் மூன்றாவது இடத்தில் பெங்களூர் அணியும் உள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளுக்கும் சமூக வலைத்தளங்களில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) – 42 மில்லியன்

  • இன்ஸ்டாகிராம் – 17.2M
  • ட்விட்டர் – 10.8M
  • ஃபேஸ்புக் – 14M

தோனி தலைமையில் சென்னை அணி இருந்ததில் இருந்து சென்னைக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இன்னும் குறையவே இல்லை. எனவே, சமூக வலைத்தளங்களிலும் சென்னை அணிக்கு தான் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இரண்டாவது இடம் – மும்பை இந்தியன்ஸ் (MI)

  • மும்பை இந்தியன்ஸ் (MI) – 38.1 மில்லியன்
  • இன்ஸ்டாகிராம் – 15.8M
  • ட்விட்டர் – 8.3M
  • ஃபேஸ்புக் – 14M

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) – 34.1 மில்லியன்

  • இன்ஸ்டாகிராம் – 16.8M
  • ட்விட்டர் – 7.3M
  • ஃபேஸ்புக் – 10M

ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்றாலும் கூட பெங்களூருக்கு ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதன் காரணமாக அவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் இந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) – 29.1M

  • இன்ஸ்டாகிராம் – 6.8M
  • ட்விட்டர் – 5.3M
  • ஃபேஸ்புக் – 17M

பஞ்சாப் கிங்ஸ் (PBKS) – 15.6M

  • இன்ஸ்டாகிராம் – 3.5M
  • ட்விட்டர் – 3M
  • ஃபேஸ்புக் – 9.1M

டெல்லி கேபிடல்ஸ் (DC) – 15.8M

  • இன்ஸ்டாகிராம் – 4.1M
  • ட்விட்டர் – 2.6M
  • ஃபேஸ்புக் – 9.1M

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) – 14.7M

  • இன்ஸ்டாகிராம் – 4.7M
  • ட்விட்டர் – 3.3M
  • ஃபேஸ்புக் – 6.7M

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) – 12.9M

  • இன்ஸ்டாகிராம் – 4.6M
  • ட்விட்டர் – 2.9M
  • ஃபேஸ்புக் – 5.4M

குஜராத் டைட்டன்ஸ் (GT) – 5.63M

  • இன்ஸ்டாகிராம் – 4.4M
  • ட்விட்டர் – 612.8K
  • ஃபேஸ்புக் – 613K

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) – 5.31M

  • இன்ஸ்டாகிராம் – 3.4M
  • ட்விட்டர் – 810.9K
  • ஃபேஸ்புக் – 1.1M

சமூக வலைத்தளங்களில் மொத்தமாக எடுத்த கணக்குகளின் அடிப்படையில் CSK, MI, RCB ஆகிய அணிகளுக்கு தான் சமூக வலைதளங்களில் அதிக ஆதரவு இருக்கிறது. இதனை தாண்டி இந்த அணிகளுக்கு சமூக வலைத்தளங்களில் இல்லாத ரசிகர்களும் அதிகமாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்