தொடர் தோல்வியில் இருந்து மீண்ட சென்னை…லக்னோவை வீழ்த்தி அசத்தல் வெற்றி!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

லக்னோ : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பம் தடுமாற்றத்துடன் கலந்த அதிரடியில் தொடங்கியது என்று கூறலாம்.
தொடர்ச்சியாக விக்கெட் விழுந்த காரணத்தால் ரிஷப் பண்ட் மட்டும் 63 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியாக லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக சென்னை அணி 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
சென்னை அணி ஆரம்பத்தில் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது என்று கூறலாம். உதாரணமாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷேக் ரஷித் 27, ரச்சின் ரவீந்திரா 37 ரன்கள் எடுத்து கொடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களுக்கு அடுத்ததாக வந்த ராகுல் திரிபாதி 9, ரவீந்திர ஜடேஜா 7 ரன் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இவர்கள் இருவரும் சரியான ரன்கள் எடுத்து கொடுக்காதது தான் சென்னை அணியின் தடுமாற்றத்திற்கு காரணமாகவும் அமைந்துள்ளது.
இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் அட்டமிழந்த நிலையில், சென்னை அணி 96 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இவர்களுக்கு அடுத்ததாக வந்த சிவம் துபே, விஜய் சங்கர் இருவரும் சிறிது நேரம் களத்தில் நிதானமாக விளையாடி கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் விஜய் சங்கர் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியே திரும்பினார். இதுவும் சென்னை அணியின் வெற்றிக்கு ஒரு அழுத்தமாக அமைந்தது என்று சொல்லலாம்.
இருப்பினும் களத்தில் சிவம் துபே மற்றும் தோனி இருந்த காரணத்தால் சென்னை அணி ரசிகர்கள் சென்னை வெற்றிபெறும் என ஆவலுடன் காத்திருந்தார்கள். வந்த உடனே 15 ஓவர்களில் தோனி அதிரடியாக இரண்டு பவுண்டரிகளை விளாசினார். அடுத்ததாக 4 ஓவர்களில் 44 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. 16-வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸர் விளாசி அழுத்தத்தை குறைத்தார். அடுத்ததாக 3 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்டது.
போட்டி திக்..திக்..என பரபரப்பாக கொண்டு சென்று இருந்த நிலையில், 17-வது ஓவரில் தோனி ஒரு பவுண்டரி விளாசினார். இருப்பினும் துபே திணறி திணறி விளையாடி வந்த காரணத்தால் அழுத்தம் ஏற்பட்டது. பின், 2 ஓவர்களில் அணி வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 18-வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட துபே முதல் பந்தில் பவுண்டரி விளாசி, அதற்கு அடுத்த பந்தில் சிக்ஸர் விளாசினார்.
அடுத்ததாக அந்த ஓவரின் கடைசி பந்தில் தோனி ஒரு பவுண்டரி விளாசினார். இதன் காரணமாக கடைசி 6 பந்துகளில் வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளில் 2 ரன்கள் கிடைத்த நிலையில், 4 பந்துகளில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 3-வது பந்தை எதிர்கொண்ட துபே பவுண்டரி அடித்து வெற்றிபெற வைத்தார்.
கடைசி நேரத்தில் தோனி 26*, சிவம் துபே 43* ரன்கள் எடுத்த நிலையில், சென்னை அணி 19.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மேலும், லக்னோ அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக சிறப்பாக பந்துவீசி ரவி பிஷ்னோய் 2 விக்கெட்களை வீழ்த்தினார். கடைசியாக சென்னை அணி இந்த சீசனில் முதல் போட்டியில் வெற்றிபெற்று அடுத்ததாக 5 போட்டியில் தொடர் தோல்வியை சந்தித்திருந்தது. இப்போது வெற்றிபெற்று பழைய படி பார்முக்கு திரும்பியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025