சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இன்று 38-வது லீக் போட்டியில் சென்னை -கொல்கத்தா அணிகள் அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் விளையாடியது. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர். வந்த வேகத்தில் 9 ரன்கள் எடுத்து சுப்மான் கில் ரன் அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து, வெங்கடேஷ் ஐயர் 18 ரன்கள் எடுக்க பின்னர், களமிறங்கிய ராகுல் திருப்பதி சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இருவரும் சிறப்பாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் ரஸ்ஸல் வீசிய பந்தில் மோர்கனிடம் கேட்சை கொடுத்து 40 ரன்னில் வெளியேறினார். இவர்கள் கூட்டணியில் 74 ரன் எடுத்தனர். அடுத்த சில பந்தில் ஃபாஃப் டு பிளெசிஸ் 43 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய அம்பதி ராயுடு வந்த வேகத்தில் 10 ரன் எடுத்து வெளியேற, பின்னர் மொயின் அலி அதிரடி காட்ட 32 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய தோனி ஒரு அணியிலும், சுரேஷ் ரெய்னா 11 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழக்க சென்னை அணி இக்கட்டான சூழ்நிலையில் சென்றது. அப்போது களமிறங்க ஜடேஜா, சாம் கரண் களமிறங்க ஜடேஜா 4 பந்தில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி என 20 ரன்கள் விளாசி போட்டியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். பின்னர், கடைசி ஓவரில் 4 ரன் தேவை என்ற நிலையில், முதல் பந்தில் சாம் கரண் விக்கெட்டை இழக்க அடுத்து இறங்கிய ஷர்துல் தாக்கூர் 3 ரன்கள் எடுக்க அடுத்து பந்தில் ஜடேஜா விக்கெட்டை பறிகொடுத்தார்.
கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் என்ற நிலையில் தீபக் சாஹர் ஒரு ரன் எடுத்து சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதனால், புள்ளி பட்டியலில் 16 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு சென்றது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…