இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இனி வரும் போட்டிகளில் தங்கள் முழுத்திறனை வெளிகாட்ட்டி அணியை வெற்றிபெற செய்வார்கள் என அந்த அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது. தொடர் தோல்வி, புள்ளி பட்டியலில் கடைசி இடம் என அதள பாதளத்தில் CSK அணி சென்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கைநழுவி சென்று விட்டது என்று தான் கூறப்படுகிறது.
8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது CSK . மீதம் உள்ள 6 போட்டிகளிலும் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளில் வெற்றி தோல்விகளும் இனி CSK பிளே ஆப் வாய்ப்பை பாதிக்கும் சூழல் நிலவி வரும் சூழலில் ரசிகர்கள் இனி அடுத்த சீசன் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.
இப்படியான சூழலில் இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் நடைபெற்ற, பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் சென்னை அணி வீரர் சிவம் துபே, சென்னை அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய காசி விஸ்வநாதன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை சரியாக விளையாடவில்லை. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை தழுவி வருகிறது. இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் CSK அணியினர் தங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறச்செய்வார்கள். 2010-ம் ஆண்டு தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை தழுவிய சென்னை அணி, பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதை நினைவூட்டி பேசினார் காசி விசுவநாதன்.