CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க வீரர் ஷேக் ரஷீத் முகமது சமியின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து சாம் கரன் 9 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து ஆயுஷ் மத்ரே 30 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். ரவீந்திர ஜடேஜா 21 ரன்னில் அவுட் ஆகினார். அடுத்தடுத்து வீரர்கள் குறைந்த ரன்னில் அவுட் ஆகி வெளியேற டெவால்ட் ப்ரீவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார். சிவம் துபே 12 ரன்களில் வெளியேற கேப்டன் தோனி 6 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இம்பேக்ட் பிளேயர் அன்சுல் கம்போஜ் 2 ரன்னில் அவுட் ஆகினார். தீபக் ஹூடா 22 ரன்கள் அடித்து இறுதியில் அவுட் ஆகினார். 19.5 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்துள்ளது.
SRH அணி சார்பாக ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சமி, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 20 ஓவரில் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் SRH அணி அடுத்து களமிறங்க உள்ளது.