சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை.!
இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகிறது.
16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்றைய 17-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மோதுகிறது.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் 3 போட்டி விளையாடி 2 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அதைப்போல சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் 3 போட்டி விளையாடி 2 போட்டிகளில் வெற்றிபெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
எனவே, இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் முன்னுக்கு செல்லவேண்டும் என்ற முனைப்பில் இரண்டு அணிகளும் களமிறங்குகிறது. இதனால் போட்டி கண்டிப்பாக கடுமையாக இருக்கும் என தெரிகிறது.
இதற்கு முன்பு இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் சென்னை அணி 15 முறையும், ராஜஸ்தான் அணியும் 11 முறையும் வெற்றிபெற்றுள்ளது. மேலும், இன்று சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறுவதையொட்டி சென்னை மெட்ரோ ரயில் இன்று நள்ளிரவு வரை இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.