CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டெவான் கான்வே-ன் தந்தை டென்டன் உயிரிழந்தார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான டெவான் கான்வே தந்தை உயிரிழந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெவான் கான்வே தந்தை டென்டன் கான்வே தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். இளம் வயதில் நியூசிலாந்து வந்து பிறகு அந்நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் காரணமாக டெவான் கான்வே நியூசிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
டென்டன் கான்வே இன்று (ஏப்ரல் 21) உயிரிழந்தார் என CSK அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கடினமான சூழலில் டெவான் கான்வே உடன் துணை நிற்பதாக CSK அணி தெரிவித்துள்ளது.