ஆல்பி மார்கல் என்ற பெயரை தெரியாத கிரிக்கெட் ரசிகர்கள் கிடையாது. தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டரான மார்க்கல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர்.
பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் எதிரணியிரை கலங்கடிக்கும் திறமையுள்ள மார்க்கல் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொசாம்பிக் நாட்டில் ஆயுதம் கடத்திய குற்றத்துக்காக இரண்டு நாட்கள் சிறையில் இருந்ததாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
மொசாம்பிக்கில் காட்டுக்குள் சென்று வேட்டையாடிவிட்டு திரும்பிய மார்க்கல், தன் காரை சுத்தம் செய்ய கூறி தன்னுடைய தோட்டக்காரரிடம் கூறியுள்ளார். அப்போது காருக்குள் துப்பாக்கி குண்டுகள் இருப்பதை பார்த்த தோட்டக்காரர் அதை என்ன செய்வதென்று தெரியாமல் மார்க்கலின் கிரிக்கெட் பை ஒன்றில் வைத்துள்ளார். இதை அறியாத மார்க்கல் அந்த பையை எடுத்துகொண்டு விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்த போது உள்ளே துப்பாக்கி குண்டுகள் இருந்ததையடுத்து மார்க்கலை பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். இரண்டு நாள் கழித்து மார்க்கலுடைய நண்பர்கள் அவரை வெளியில் எடுத்துள்ளனர். “என் வாழ்வில் மிக மோசமான 2 நாட்கள் அதுதான்” என மார்க்கல் தெரிவித்துள்ளார்.
DINASUVADU
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…