CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்மைதானத்தில் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா ஒருவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக தான் பெரிய இலக்கும் வைக்க முடிந்தது.

தொடர்ச்சியாக பஞ்சாப் வீரர்கள் விக்கெட் இழந்துகொண்டிருந்த சமயத்தில் தொடக்க பிரியான்ஷ் ஆர்யா களத்தில் நின்று சதம் விளாசினார். அதைப்போல, ஷஷாங்க் சிங் 52 * எடுத்ததன் காரணமாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.

சேஸிங் என்றாலே எங்களுக்கு அலர்ஜி என மோசமான சாதனையை வைத்திருக்கும் சென்னை அணி 220 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. களமிறங்கியவுடன் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு பவர்பிளே ஓவர்களில் விக்கெட் விடாமல் விளையாடியது. பவர்பிளேக்கு பிறகு தான் விக்கெட் விட்டது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 36 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்.

அவருக்கு அடுத்ததாக வந்த கேப்டன் ருதுராஜ் வந்த வேகத்தில் அட்டமிழந்து 1 ரன்களுக்கு வெளியேறினார். இரண்டு விக்கெட் விழுந்தாலும் துபே, மற்றும் டெவின் கான்வே இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். ஒரு கட்டத்தில் அதிரடியாக விளையாடி வந்த சிவம் துபே 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் கடைசி 24 பந்துகளில் சென்னை அணி வெற்றிபெற 68 ரன்கள் தேவைப்பட்டது.

ரன்ரேட் அதிகமாக இருந்தாலும் கூட துபேக்கு பிறகு தோனி களத்திற்கு வந்த காரணத்தால் சென்னை அணி வெற்றிபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தார்கள். சில பந்துகள் நிதானமாக விளையாடிய தோனி ஒரு சிக்ஸர் விளாசிய நிலையில், மற்றோரு முனையில் இருந்த கான்வே 69 ரன்களுக்கு ரிட்டர் அவுட் ஆனார். பிறகு ஜடேஜா களத்திற்குள் வந்தார். கடைசி 12 பந்துகளில் 43 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் போட்டி பரபரப்பாக மாறியது.

ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட தோனி ஒரு பவுண்டரி அடுத்த பந்தில் சிக்ஸர் என விளாசினார். இதனால் கடைசி 6 பந்துகளில் 28 ரன்கள் தேவை என்ற நிலைமை இருந்தது. கடைசி ஓவரின் முதல் பந்தில் தோனி 27 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறியே நிலையில் அணியின் வெற்றி நம்பிக்கை முற்றிலும் போனது என்று தான் சொல்லவேண்டும்.

கடைசி வரை போராடிய இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5  விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்த போட்டியில் பஞ்சாப் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த சீசன் முழுவதும் சேஸிங்கில் சொதப்பிய சென்னை அணி இந்த போட்டியிலாவது வெற்றி பெரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கடைசி வரை போராடி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சென்னைக்கு எதிரான இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்களையும், கிளென் மேக்ஸ்வெல், யாஷ் தாக்கூர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்