ஏலம் இல்லாமல் நேரடியாக வீரரை வாங்கும் முறையில், ராஜஸ்தான் அணியில் இருந்து ராபின் உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
வருகின்ற 2021 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராபின் உத்தப்பா விளையாடுவது உறுதியாகி உள்ளது. இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஆறாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராபின் உத்தப்பா விளையாட உள்ளார்.
இதுவரை 2008 முதல் 189 ஆட்டங்களில் விளையாடி உள்ள உத்தப்பா 4607 ரன்களை ஐபிஎல் தொடரில் குவித்துள்ளார். இதுகுறித்து சென்னை அணி பதிவில், ராபின் உத்தப்பா நம் புதிய பேட்ஸ்மேனாக இணைந்துள்ளார். உங்களை வரவேற்பதில் மகிழ்கிறோம். மஞ்சள் வணக்கம் என ட்வீட் போட்டு உத்தப்பாவை சென்னை அணியின் மஞ்சள் ஜெர்சி போட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அந்தந்த அணியினர் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில், சி.எஸ்.கே அணி, ஷேன் வாட்சன் (ஓய்வு), பியூஷ் சாவ்லா, கேதார் ஜாதவ், முரளி விஜய், ஹர்பஜன் சிங், மோனு குமார் சிங் ஆகியோரை விடுவித்துள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…