SRH, மும்பையை அடுத்து ‘கம்பேக்’ கொடுக்குமா CSK? ருதுராஜுக்கு பதில் இவரா?
இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி மூலம் தொடர் தோல்வியில் இருந்து CSK மீளுமா என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

சென்னை : இந்த வருட ஐபிஎல் தொடரில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் தற்போது கம்பேக் வெற்றியை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன. முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த அணி முதல் முதலாக ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்று அடுத்த 4 போட்டிகளில் தொடர் தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் இறுதி இடத்தில் இருந்தது.
இறுதியாக ஏப்ரல் 12இல் பஞ்சாப் கிங்ஸ் உடன் மோதி 246 எனும் இலக்கை 19வது ஓவரில் எட்டி தங்களது மிரட்டலான கம்பேக் வெற்றியை பதிவு செய்துவிட்டது. அடுத்து மும்பை அணி, முதல் 2 போட்டிகளில் தொடர் தோல்வி அடுத்து கொல்கத்தா அணியுடன் வெற்றி, அடுத்து மீண்டும் 2 போட்டி தோல்வி என துவண்டு இருந்த மும்பை நேற்று தங்கள் கம்பேக் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
அதுவும், இந்த ஐபிஎல்லில் தோல்வி கண்டிராத டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக 205 ரன்கள் அடுத்து டெல்லி அணியை 193 ரன்களுக்கு சுருட்டி ஆல் அவுட் செய்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இப்படியாக புள்ளிப்பட்டியலில் அதள பாதாளத்தில் இருந்த ஹைதராபாத், மும்பை, சென்னை, அணிகளில் ஹைதராபாத், மும்பை அணிகள் தங்கள் கம்பேக் வெற்றியை பதிவு செய்து விட்டன. அடுத்து அனைவரின் பார்வையும் சென்னை பக்கம் திரும்பியுள்ளது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று லக்னோ மைதானத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.
லக்னோ அணி 6 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி பெற்று 2 தோல்வி மட்டுமே கண்டு புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 6 போட்டிகளில் விளையாடி 5-ல் தொடர் தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. லக்னோ அணி பேட்டிங்கிலும் சரி, பந்துவீச்சிலும் சரி லக்னோ அணி பலம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால், CSK அணி தொடக்கம் மட்டும் கான்வே, ரச்சன் ரவீந்திரா ஆகியோர் அளித்தாலும் மிடில் ஆர்டர் மிக மோசமாக உள்ளது. பந்துவீச்சும் சொல்லி கொள்ளும் அளவுக்கு இல்லை. இதனால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு சற்று சவாலானதாகவே அமையும் எனக் கூறப்படுகிறது.
CSK அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதை அடுத்து தோனி கேப்டனாக களமிறங்கியுள்ளார். அதே போல ருதுராஜூக்கு பதிலாக 17வயது இளம் வீரர் ஆயூஸ் மாத்ரேவை CSK களமிறக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இவர் இதுவரை 9 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.