CSKvsGT : இரண்டாவது வெற்றியை பதிவு செய்யப்போவது எந்த அணி?
CSKvsGT : இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 7-வது போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகிறது. இந்த சீசனில் இந்த இரண்டு அணிகளுமே விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது வெற்றியே பதிவு செய்யும் முனைப்புடன் களம் காண்கிறது.
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் பெங்களூர் அணியை எதிர்கொண்டு வென்றது. அதைப்போல், குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. எனவே, இன்று நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.
நேருக்கு நேர்
இதற்கு முன்னதாக சென்னைக்கு சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் 5 முறை மோதியுள்ளது. இதில் 3 முறை குஜராத் அணி தான் வெற்றி பெற்று இருக்கிறது. இரண்டு முறை மட்டுமே சென்னை அணி வெற்றிபெற்றுள்ளது.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள் (Probable Playing XI)
சென்னை அணி
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ் பாண்டே.
குஜராத் அணி
சுப்மன் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ராகுல் டெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன்.