இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து முதலில் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் , மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். பஞ்சாப் அணியின் ஆட்டம் தொடக்கத்திலிருந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால், பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா மற்றும் நிக்கோலஸ் பூரன் என 5 வீரர்களும் அடுத்தது விக்கெட்டை இழந்தனர்.
இதன்காரணமாக பஞ்சாப் அணி 26 ரன்னில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பஞ்சாப் பரிதாபமான நிலையில் இருந்த போது மத்தியில் இறங்கிய தமிழக வீரர் ஷாருக்கான் நிதானமான ஆட்டத்தை விளையாடி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 47 ரன்னில் ஷாருக்கான் விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் தீபக் சாஹர் 4 விக்கெட் பறித்தார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…