சென்னை அணியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் நாளை நடைபெறவிருந்த சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஒத்திவைக்க படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியார் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் கொல்கத்தா- பெங்களூர் இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதைபோல் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் 2 பேர் உட்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அணியின் சி.இ.ஓ. காசி விஷ்வநாதன் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் வீரர்கள் செல்லும் பேருந்தின் கிளீனர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவிருக்கும் நிலையில், சென்னையை அணியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாளை நடைபெறும் போட்டியை ஒத்திவைக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…