மீண்டும் சொதப்பல் பாதையில் சென்னை! மும்பை அணியுடனான தோல்விக்கு முக்கிய காரணங்கள்?

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

Mumbai Indians vs Chennai Super Kings

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இல்லாத அளவுக்கு சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த சீசனில் ஏற்கனவே நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து மொத்தமாக 6 தோல்விகளை சந்தித்து புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக லக்னோ அணியுடன் சென்னை மோதியது.

அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்ற நிலையில், இனிமேல் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியை சந்தித்து மீண்டும் சொதப்பல் பாதைக்கு திரும்பியுள்ளது. எனவே, மும்பை அணியுடனான தோல்விக்கு முக்கிய காரணங்கள் இருக்கிறது. அந்த காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

ருதுராஜ் : சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கைக்வாட் முழங்கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக விளையாட முடியாத சூழலில் இருப்பதால் அவர் இல்லாமல் இருப்பதால் நல்ல தொடக்கமும் மிடில் ஆர்டரில் சரியான பார்ட்னர்ஷிப் இல்லை. மும்பை போன்ற வலுவான அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்திருக்கவேண்டும். ஆனால், 176 தான் சென்னை அணியால் அடிக்க முடிந்தது.

கடைசி நேரத்தில் தடுமாற்றம் : முதலில் இருந்து தடுமாறி விளையாடிய சென்னை அணி மிடில் ஓவரில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தாலும் கடைசி இரண்டு  ஓவர்களில் அவர்களால் சிறப்பாக விளையாடி ரன்கள் குவிக்க முடியவில்லை அந்த ஓவர்களை சிறப்பாக பயன்படுத்தி இருந்தால் மும்பை அணிக்கு 200 ரன்கள் கூட வைத்திருக்கலாம். ஆனால், தோனி, துபே போன்ற வீரர்கள் அந்த முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள், குறிப்பாக பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில், மும்பை அணியின் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தத் தவறினர். சென்னை பந்துவீச்சாளர்கள் பந்துகளை சிக்ஸர், பவுண்டரி என மும்பை வீரர்கள் தெறிக்கவிட்டார்கள். ஆரம்பத்திலே சரியாக திட்டமிட்டு மும்பை அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்தியிருந்தால் போட்டியில் வெற்றிபெற்று இருக்கலாம். இந்த காரணங்கள் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்