இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவிற்கு பதிலாக ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இன்று தொடங்கும் போட்டி அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் சென்னை வீரர்கள் ஃபாஃப் டு ப்ளெஸி, சாம் கரண் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
சென்னை அணி , மும்பை அணியுடன் கடைசி போட்டியில் மோதியது. அப்போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, மீண்டும் இரு அணிகளும் மோதவுள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
டெல்லி 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் தலா 10 புள்ளிகள் பெற்று 2, 3-வது இடங்களில் உள்ளன. மும்பை 8 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…