சென்னை – மும்பை மோதல் ..! வீழ்வது யார் ..? வீழ்த்தப்போவது யார்..?

Default Image

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவிற்கு பதிலாக ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இன்று தொடங்கும் போட்டி அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் சென்னை வீரர்கள் ஃபாஃப் டு ப்ளெஸி, சாம் கரண் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.

சென்னை அணி , மும்பை அணியுடன் கடைசி போட்டியில் மோதியது. அப்போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, மீண்டும் இரு அணிகளும் மோதவுள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில்  எழுந்துள்ளது.

டெல்லி 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் தலா 10 புள்ளிகள் பெற்று 2, 3-வது இடங்களில் உள்ளன. மும்பை 8 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்