நாளை சென்னை – மும்பை அணிகள் மோதல் ..!
நாளை இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 14-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவிற்கு பதிலாக ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. நாளை தொடங்கும் போட்டி அக்டோபர் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
29 ஆட்டங்கள் முடிவில் டெல்லி 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் அணிகள் 5 வெற்றி, 2 தோல்வியுடன் தலா 10 புள்ளிகள் பெற்று முறையே 2, 3-வது இடங்களில் உள்ளன. மும்பை 8 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளது.
துபாயில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. நாளைய போட்டியில் ஃபாஃப் டு ப்ளெஸி, சாம் கரண் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.