சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 173 ரன்கள் எடுத்தது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஐபிஎல் தொடரின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில்நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி தொடக்க வீரர்களான ஷிகர் தவான், பிரித்வி ஷா களமிறங்க வந்த வேகத்தில் தவான் 7 ரன்களில் வெளியேற, அதிரடியாக விளையாடி வந்த பிரித்வி ஷா 60 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன்பின் வந்த அக்சர் படேல் 10 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ஷிம்ரான் ஹெட்மியர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த் 51* ரன்கள் அடித்து களத்தில் கடைசிவரை இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் டெல்லி 5 விக்கெட் இழந்து 172 ரன்கள் எடுத்தனர். சென்னையில் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா, பிராவோ, மொயீன் அலி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியுள்ளது. சென்னை அணியில் தொடக்க வீரராக ருதுராஜ் ,ஃபாஃப் டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். இரண்டாவது பந்திலேயே ஃபாஃப் டு பிளெசிஸ் அன்ரிச் நார்ட்ஜேயிடம் போல்டானார்.
பின்னர் ராபின் உத்தப்பா, ருதுராஜ் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த ராபின் உத்தப்பா அரைசதம் விளாசி 63 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கும். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாகூர் வந்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி சென்றார். அடுத்து இறங்கிய அம்பத்தி ராயுடு ஒரு ரன் எடுத்து ரன் அவுட் ஆனார்.
சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் 19வது ஓவரில் அக்சர் படேலிடம் கேட்சை கொடுத்து 70 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் 6 பந்தில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதல் இரண்டு பந்தில் பவுண்டரி விளாசினார். பின்னர் அடுத்த பந்தில் வைடு செல்ல அடுத்த பந்தில் மீண்டும் தோனி பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெற செய்தார். இறுதியாக சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 173 ரன்கள் எடுத்தது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…