IPL2022: தொடர் தோல்வியில் சென்னை.., லக்னோ அபார வெற்றி..!

Published by
murugan

இறுதியாக 19.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை 211 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டை வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் 7-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.

சென்னை அணியின் தொடக்க வீரராக ராபின் உத்தப்பா, ருதுராஜ் இருவரும் களமிறங்கினர். ருதுராஜ் ஒரு ரன் எடுத்து ரன் அவுட் ஆகி ரசிகர்களுக்கு  அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் மொயின் அலி களமிறங்கினார். தொடக்க வீரராக களம் இறங்கி ராபின் உத்தப்பா 27 பந்துகளில் அரை சதம் விளாசினார். அதில் 8 பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும்.

பின்னர் களமிறங்கிய மொயின் அலி 35 ,அம்பதி ராயுடு 27 , ஷிவம் துபே 49 ரன்கள் குவித்தனர். இதனால், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தனர். லக்னோவில் ரவி பிஷ்னாய், அவேஷ் கான், ஆண்ட்ரூ டை 2 தலா ஒரு விக்கெட்டை பறித்தனர். 211 ரன்கள் இலக்குடன் லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் குவின்டன் டி காக் இருவரும்களமிறங்கினர்.

இருவரும் தொடக்கத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இருவரும் கூட்டணியில் 99 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் அம்பத்தி ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து 40 ரன்னில் வெளியேறினார். பின்னர் மனிஷ் பாண்டே வந்த வேகத்தில் 5 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி வந்த குவின்டன் டி காக் அரை சதம் விளாசி 61 ரன்கள் எடுத்து தோனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த தீபக் ஹூடா 13 ரன்னில் விக்கெட்டை இழந்தார். எவின் லூயிஸ் அதிரடியாக விளையாடிய லக்னோ அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். கடைசிவரை களத்தில் நின்று எவின் லூயிஸ் 55* ரன்கள் குவித்தார். இறுதியாக 19.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை 211 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டை வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. சென்னை அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது. லக்னோ அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியை ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.

Published by
murugan

Recent Posts

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

12 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

60 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

2 hours ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

3 hours ago