டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை…காத்திருக்கும் முக்கிய சவால்கள்!

சென்னை அணியும், டெல்லி அணியும் இதுவரை 30 போட்டிகள் நேருக்கு நேராக மோதியுள்ளது அதில் 19 முறை சென்னையும், 11 முறை டெல்லி அணியும் வெற்றிபெற்றுள்ளது.

CSK vs DC

சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. ஏற்கனவே, இந்த தொடரில் 1 போட்டியில் மற்றும் வெற்றிபெற்று கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து மோசமான பார்மில் இருக்கிறது.

அதேசமயம் டெல்லி அணி இந்த சீசனில் 2 போட்டிகள் விளையாடிய நிலையில் இரண்டிலும் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அளவுக்கு அணியில் இருக்கும் வீரர்களான மிட்செல் ஸ்டார்க், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் செம பார்மில் இருக்கிறார்கள்.

உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி விளையாடிய நிலையில், 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கிய ஸ்டார்க், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, பெரிய பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அவரது துல்லியமான யார்க்கர்களும், வேகமும் ஹெட் போன்ற அதிரடி வீரர்களை கூட சமாளிக்க முடியாத நிலைக்குத் தள்ளியது. எனவே, அதே போல தான் இன்றயை போட்டியிலும் அவர் பந்துவீசுவார்.

இது தான் சென்னை வீரர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களது பலமான பேட்டிங் வரிசையை நம்பியிருக்கும் நிலையில், ஸ்டார்க்கின் வேகப்பந்து ஆட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்படலாம். குறிப்பாக, சென்னையின் தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் நடு வரிசை வீரர்கள் அவருடைய பந்துவீச்சை கணித்து சரியாக விளையாடவேண்டும்.

அதைப்போலவே, சுழற்பந்துவீச்சுக்கு சேப்பாக்கம் பிட்ச் விக்கெட் எடுத்துக்கொடுக்க உதவும். சென்னையில் அட்டகாசமான சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது போல டெல்லியிலும் இருக்கிறார்கள். அக்சர் படேல், குல்தீப் யாதவ் இருவரும் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் தான். எனவே, இவர்களுடைய பந்துவீச்சும் சவாலாக இருக்கும்.

அதே சமயம், டெல்லி அணியின் பேட்டிங்கும் அபாரமாக இருந்து வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான சமீபத்திய போட்டியில், டெல்லி அணி 164 ரன்கள் என்ற இலக்கை 16 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து எளிதாக வெற்றி பெற்றது. எனவே, பேட்டிங்கையும் சமாளிக்க சரியான திட்டமிடுதல் வேண்டும்.
எனவே, இந்த சவால்களை எப்படி சமாளித்து சென்னை விளையாடப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்