இன்று ஐபிஎல் டி20 தொடரின் 4-வது லீக் போட்டியில் சென்னை VS ராஜஸ்தான் அணிகள்மோதியது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்மித் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ஜெய்ஸ்வால் 6 ரன்னில் வெளியேறினர். பின்னர், இறங்கிய சஞ்சு சாம்சன் , ஸ்மித் இருவரும் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 74 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். இதைதொடர்ந்து, தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மித் சிறப்பாக விளையாடி 69 ரன்கள் குவித்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளனர்.
217 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்களாக முரளி விஜய் , வாட்சன் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய வாட்சன் 33 ரன்னில் வெளியேற, டு பிளெசிஸ் களமிறங்கினார்.
பின்னர், முரளி விஜய் 21 , சாம் கரண் 17 ரன்களில் வெளியேற நிதானமாக விளையாடி வந்த டு பிளெசிஸ் அரைசதம் அடித்து 72 ரன்கள் குவித்தார். மத்தியில் இறங்கிய தோனி 3 பந்தில் 3 சிக்ஸர் விளாசினார். இறுதியாக சென்னை அணி 5 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…