மே 10 ஆம் தேதி சென்னை-டெல்லி ஐபிஎல் போட்டி… சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை.!

Ticket sale IPL

வரும் மே 10 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் வெற்றிகரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டி என்றால் ரசிகர்கள் உற்சாகம் கொஞ்சம் அதிகம் என்றே கூறலாம். சென்னை அணி எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் மஞ்சள் நிற படையுடன் மைதானத்தில் ஆதரவு அளித்து வருகின்றனர், இது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மே 10இல் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியிருக்கிறது. கடந்த முறை டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் ஏற்பட்டதாகவும் மற்றும் முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்றும் புகார் எழுந்த நிலையில், இன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு தனியாக கவுண்டர்கள் அமைத்து டிக்கெட் விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் கண்காணிப்பில் இருந்ததாகவும், கூட்ட நெரிசலை குறைக்க காலை 7 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

  • C/D/E லோயர் (ரூ 1,500) – கவுண்டர் மட்டும்
  • C/D/E அப்பர் (ரூ 3,000) – ஆன்லைனில் மட்டும்
  • I/J/K லோயர் (ரூ. 2,500) – கவுண்டர் மற்றும் ஆன்லைனில்
  • I/J/K அப்பர் (ரூ 2,000) – கவுண்டர் மற்றும் ஆன்லைனில்
  • KM கருணாநிதி (மேல் தளம்) (ரூ 5,000) – ஆன்லைனில் மட்டும்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்