நீண்ட இடைவெளி ஒரு மாற்றத்தை மாற்றும்!தோனி தடால் பதில்
ஐபிஎல் போட்டிகளில் நீண்ட இடைவெளி அணியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உதவியாக இருந்ததாக சென்னை அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் இன்று மோதிவருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.சென்னை பந்து வீசி வருகிறது.ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் டேனி பேரிஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி நடையைக் கட்டினார்
இதற்கு முன் டாஸ் சுண்டிய பிறகு பேசிய தோனி விக்கெட்டை விரைவில் எடுப்போம் என நம்புகிறேன்.எங்களுக்கு நீண்ட நேரம் கிடைக்கும் பட்சத்தில் முக்கிய சந்திப்புகளை நடந்த முடிந்தது அது அணியின் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் தேவையான மாற்றங்களை செய்ய உதவியாக இருந்தது.ஒரு அணிக்கு பேட்டிங் என்பது மிக முக்கியமானது.நீண்ட நேரம் விளையாடுவதும்,அனுபவமும் போட்டியில் நன்றாக எடுபடும் என்று தனக்கே உரிய பாணியில் கூறிவிட்டு களத்திற்கு சென்றார்.