சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்..!!

Published by
பால முருகன்

ஐபிஎல் விதிகளை மீறியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

14 வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் அடித்தது. அடுத்ததாக 189 அடித்த வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்திலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, ஆம் 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீச சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக நேரம் எடுத்து கொண்டதால் ஐபிஎல் நிர்வாகம் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஆம்,  ஐபிஎல்லின்  திருத்தப்பட்ட விதிகளின்படி குறைந்தபட்சம் 14.1 ஓவர்களை ஒரு மணி நேரத்திற்குள் வீசி இருக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவில் ஓவர்களை வீசி முடிக்காததால் ஐபிஎல் விதிகளை மீறியதாக கேப்டன் தோனிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறை இதை போன்று வீதி மீறப்பட்டால் 24 லட்சம் ரூபாய் அபராதம். மூன்றாவது முறை விதி மீறினால் 30 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.

Published by
பால முருகன்

Recent Posts

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு!

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…

9 minutes ago

“முறைகேடான விதத்தில் பாஜக கூட்டணி வெற்றி”! விளக்கம் கேட்கும் திருமாவளவன்!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…

24 minutes ago

IPL Auction : களைகட்டப் போகும் சவுதி..! இன்று தொடங்கும் ஐபிஎல் ஏலம்..!

சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…

35 minutes ago

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

16 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

17 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

17 hours ago