சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்..!!
ஐபிஎல் விதிகளை மீறியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
14 வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் அடித்தது. அடுத்ததாக 189 அடித்த வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்திலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, ஆம் 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீச சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக நேரம் எடுத்து கொண்டதால் ஐபிஎல் நிர்வாகம் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஆம், ஐபிஎல்லின் திருத்தப்பட்ட விதிகளின்படி குறைந்தபட்சம் 14.1 ஓவர்களை ஒரு மணி நேரத்திற்குள் வீசி இருக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவில் ஓவர்களை வீசி முடிக்காததால் ஐபிஎல் விதிகளை மீறியதாக கேப்டன் தோனிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறை இதை போன்று வீதி மீறப்பட்டால் 24 லட்சம் ரூபாய் அபராதம். மூன்றாவது முறை விதி மீறினால் 30 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.