IPL2024: ஹைதராபாத்திற்கு பதிலடி…சென்னை 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..!

CSKvSRH

IPL2024: ஹைதராபாத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்தனர். இதனால் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், சென்னை அணியும் மோதியது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டைகளை இழந்து 212 ரன்கள் குவித்தது.

இதில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்களும், டேரில் மிட்செல் 52 ரன்களும், சிவம் துபே 39* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார், நடராஜன்,  ஜெய்தேவ் உனத்கட் தலா ஒரு விக்கெட்டை பறித்தனர்.

213 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட்,  அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். முதல் பந்தில் டிராவிஸ் ஹெட் பவுண்டரி அடித்தார். இருப்பினும் அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே சென்றது. பின்னர் அடுத்த ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீசினார்.

அந்த ஓவரில் முதல் மற்றும் 3-வது பந்தில் சிக்ஸர் சென்ற நிலையில் அதே ஓவரின் 5-வது பந்தில் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் சிக்ஸர் அடிக்க முயன்ற போது  டேரில் மிட்செல்லிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த இம்பாக்ட் பிளேயர் அன்மோல்பிரீத் சிங் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து ஐடன் மார்க்ராம் களமிறங்க நிதானமாக விளையாடி வந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சிக்ஸர் அடிக்க முயன்ற போது பவுண்டரி லைனில்  இருந்த டேரில் மிட்செல்லிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி வந்த வேகத்தில் வெறும் 15 ரன்கள் தோனியிடம் கேட்சை கொடுத்து நடையை காட்டினார்.

10-வது ஓவரை மதீஷ பத்திரனா விளாசினார். அந்த ஓவரின் 5-வது பந்தில் ஐடன் மார்க்ராம் போல்ட் ஆகி 32 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த அதிரடி வீரர் கிளாசென் களத்தில் இறங்கியது முதல் நிதானமாக விளையாடி வந்த நிலையில் 20 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த பாட் கம்மின்ஸ் 5 , ஷாபாஸ் அகமது 7 ரன்களில் நடையை கட்ட இறுதியாக ஹைதராபாத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்தனர். இதனால் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணியில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டையும் மதீஷ பத்திரனா, முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டையும்,  ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் தலா  1 விக்கெட்டை பறித்தனர்.

இரு அணிகளும் தலா 9 போட்டிகளில் விளையாடி உள்ளனர். இதில் இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியையும் தழுவி உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்