சதத்தால் சச்சினின் சாதனையை முறியடித்த சேஸ் மாஸ்டர் விராட் கோலி …!

Default Image

விராட் கோலி சதம் மூலமாக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.இந்திய அணிக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயம் செய்துள்ளது.323 ரன்களை இலக்காக கொண்டு களமிரங்குகிறது இந்தியா.
322 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஹோலி ,துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரின் அதிரடியில் 42.1 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 326 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.கேப்டன் ஹோலி 140 ரன்களும் , துணை கேப்டன் ரோஹித் சர்மா 152 ரன்களும் எடுத்தனர்.
நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.அதாவது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.சச்சின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 4 சதங்கள் அடித்துள்ளார்.விராட் 5 சதங்கள் அடித்து அவரது சாதனையை முறியடித்துள்ளார்.அதேபோல் கேப்டனாக அதிக சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
கேப்டனாக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:

  1. சனத் ஜெயசூர்யா 10 சதங்கள்
  2. சவுரவ் கங்குலி 11 சதங்கள்
  3. ஏபி டி வில்லியர்ஸ் 13 சதங்கள்
  4. விராட் கோலி 14 சதங்கள்
  5. ரிக்கி பாண்டி 22 சதங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்