வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டக்காரர் சேஸ் சதம் அடித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜாசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 95 ஒவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் அடித்தது.
அதேபோல் இந்திய பந்துவீச்சில் குல்தீப் ,உமேஷ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக சேஸ் 98 *, ஹோல்டர் 52 ரன்கள் அடித்தனர்.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டக்காரர் சேஸ் சதம் அடித்துள்ளார்.தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 307 ரன்கள் அடித்துள்ளது.
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…