“இந்தியா-நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும் இடம் மாற்றம்- ICC

இந்தியா-நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் தற்போது அப்போட்டியை சவுத்தாம்ப்டனிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ICC நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.இந்தப் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸில் விளையாட திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது அந்தப் போட்டியானது சவுத்தாம்ப்டனிலுள்ள ஏகாஸ் அல்லது ஹாம்ப்ஷயர் பவுலில் திட்டமிட்டபடி நடைபெறப்போவதாக ICC இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
கோவிட்- 19 பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக “இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ஹாம்ப்ஷயர் பவுலில் பயோ செக்யூர் முறையில் நடத்தப்படும் என்றும் , இடத்தை சுற்றிலும் கோவிட்- 19 பாதிப்புகளை கண்டறிந்து அதை குறைக்கும் வசதியும் இங்கு உள்ளது.மேலும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் (ECB) கலந்துரையாடியப் பின்னரே”, இந்த முடிவை எடுத்ததாக ICC தெரிவித்துள்ளது.
India ???????? New Zealand
The inaugural ICC World Test Championship finalists!
The wait will be unbearable. #WTC21 | #INDvENG pic.twitter.com/X3KcNrUTJ1
— ICC (@ICC) March 6, 2021